
தமிழக குரல் விருதுகள் ஒரு பார்வை.
ஒரு விருது உங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை நன்கு அறிந்த தமிழக குரல் சமூக சேவை, தொழில் முனைவோர், தனித்திறமையில் சாதனை, அரசியல், கல்விசேவை, விளையாட்டு, எழுத்து / இலக்கியம், ஊடகம் மற்றும் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் சாதனை படைக்கும் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழக குரல் நிறுவனம் பல்வேறு தலைப்புகளில் விருது நிகழ்வுகளை நடத்தி வருகிறது, "தகடூரின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது 2021" என்கிற விருது நிகழ்வை சமூக ஆர்வலர்களை பாராட்ட முதன் முதலில் நடத்தினோம், அடுத்து "தகடூரின் மக்கள் நாயகன் விருது 2022" என்கிற நிகழ்வைதருமபுரி மாவட்ட செய்தியாளர்களுக்கு வழங்கி அவர்களின் பணியை பாராட்டினோம், அடுத்து "தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது 2022" என்கிற நிகழ்வை சமூக சேவகர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் வழங்கினோம், அடுத்து "தமிழகத்தின் நம்பிக்கை நாயகி விருது 2023" என்கிற பெயரில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தினோம் இதில் சுமார் 120க்கும் பெறப்பட்ட பல்வேறு துறை சார்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் பணியை பாராட்டினோம்.
தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது - 2023.
தமிழககுரலின் அடையாளம் "தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது", இந்த ஆண்டும் தன்னலம் பாராமல் சமூகத்திற்காக சேவையாற்றும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்தும் மேடை நிகழ்வு இந்த ஆண்டு கோவை மாநகரில் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
தகுதியான தன்னார்வலர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களை எங்கள் குழுவினர் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு விருதுகளை வழங்கப்படும்.

எங்களுடன் விளம்பரதாரராக இணைந்து செயல்பட அழைக்கவும்:
9843 663 662
